யாழ்.பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல்
தமிழர்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் - வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி மக்களால் பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (23) நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சன் டீ டக்ளஸ் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பலர் கலந்துகொண்டனர்
தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் மற்றும் காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பிரதிநிதி க.தவராசா அஞ்சலியை ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஆயுள்வேத மருத்துவரும், தமிழ் மக்கள் கூட்டணி வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார், காணி உரிமைக்கான இயக்க தலைவர் இ.முரளிதரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
திருகோணமலையில் அஞ்சலி
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 08ம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (22) திருகோணமலை சிவன் கோவிலருகில் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது.
இதில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
