கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரத்தில் உலக அதிசயமான திருமந்திர அரண்மனை திறப்பு

Batticaloa
By pavan Mar 23, 2023 05:10 AM GMT
Report

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்து வைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவது,

கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

3 ஆயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்திரத்தை கையால் உளி கொண்டு மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.

கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரத்தில் உலக அதிசயமான திருமந்திர அரண்மனை திறப்பு | Thirumandra Palace Batticaloa Opening

இந்தப் பாடல்களை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப் பெருமானும் கிழக்கிலங்கையில் முதல் முதலாக வித்தியாசமான முறையில் காட்சியளிக்கின்றது

கிழக்கிலங்கையில் தானாக தோன்றிய தான்தோன்றீஸ்வரர் போர்த்துக்கேயர் அந்த இடத்துக்கு வந்த போது இந்த கருங்கல் மாடு சாணிபோடுமா என்று கேட்ட போது அந்த மாடு எழுந்து நின்று போட்ட சாணி கருங்கல் சாணியாக இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றது.

கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரத்தில் உலக அதிசயமான திருமந்திர அரண்மனை திறப்பு | Thirumandra Palace Batticaloa Opening

போர்த்துக்கேய தளபதிகளே இந்தக் கோவிலை பெருமையாக நினைத்து வழிபட்ட மரபு இன்றும் பேசப்படுகின்றது அந்த இடத்தில் தோன்றிய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலே பிரமாண்டமான கோவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடுகின்ற அந்தக் கோவிலில் இப்போது யாழ்ப்பாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள சிவபூமி அறக்கட்டளை பல லட்சம் செலவில் திருமந்திர அரண்மனையை அமைத்துள்ளது

திருவாசக அரண்மனையை நாவற்குழியில் அமைத்து பேணிப் பாதுகாப்பது போன்று கிழக்கிலங்கையிலே இந்தப் பணி செய்து கிழக்கிலங்கை மக்களிடமும் தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்தினரிடமும் இந்தப் பணியை ஒப்படைக்கின்றார்கள்

இங்கே கருங்கற் கோவிலிலே முகலிங்கம் இலங்கையிலே ஒரே ஓர் ஆலயத்திலே இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலே முகலிங்கம் இருக்கின்றது. இப்போது கிழக்கிலங்கையில் மூலக் கருவறையிலே முகலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது 108 சிவலிங்கம் கருங்கல் அமைக்கப்பட்டிருக்கின்றது.

3 ஆயிரம் திருமந்திரப் பாடல்களும் வாசலிலிலே அசையாத் தேராக சிற்பத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத்தேரிலே சிவபெருமானுக்கு திருமந்திரத்தைப் படைத்த திருமூலரும் சிற்பமாக எழுந்தருளச் செய்துள்ளார்

கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரத்தில் உலக அதிசயமான திருமந்திர அரண்மனை திறப்பு | Thirumandra Palace Batticaloa Opening

இது மட்டுமல்ல 108 சிவலிங்கமும் திருமந்திர அரண்மனைச் சுற்றாடல்கள் புனிதம் பெறக் கூடியதாக அங்கே பல்வேறு விடயங்கள் நிலை நாட்டப்பட்டு சம்பிரதாய பூர்வமாகக் கிழக்கிலங்கை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 24 ஆம்திகதி இடம்பெறவுள்ளது.

கிழக்கிலங்கை மக்கள் மட்டுமல்ல அனைத்து சைவ மக்களும் வருகை தந்து உலக அதிசயமான 3 ஆயிரம் பாடல்கள் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது 1330 திருக்குறள் இந்தியாவில் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. திருவாசகம் யாழ்ப்பாணத்தில் 650 பதிக்கப்பட்டுள்ளது

ஆனால் உலகத்திலேயே 3 ஆயிரம் தமிழ்ப்பாடல்களை கருங்கல்லில் பதிப்பித்த பெருமை சிவபூமி அறக்கட்டளையைச் சாரும்.

இதைத் தாங்குகின்ற பெருமை கிழக்கிலங்கை மக்களைச் சாரும். அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரத்தில் உலக அதிசயமான திருமந்திர அரண்மனை திறப்பு | Thirumandra Palace Batticaloa Opening

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை எதிர்காலத்தில் சைவத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழவுள்ளது.

காலத்தால் அழியாதவாறு கருங்கற்களில் மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் பாரதிபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற கலைஞர் (புகழுடற் சின்னங்களில் தம் கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவரை ) கைகளால் செதுக்கி அமைக்கப்பட்டு வருகின்ற சிவபூமி திருமந்திர அரண்மனையில் பதித்து செயற்கரிய சைவப்பணியை கிழக்கிலங்கையிலும் (மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்) செயற்படுத்திக் கொண்டிருக்கிறார் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனார்.

வட புலத்தில் நாவற்குழியில் திருவாசக அரண்மனை அமைந்தமை போன்று எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் திருமந்திர அரண்மனை அமையவுள்ளமை சிறப்பிற்குரியது. இத்தகு சிறப்பிற்குரிய மட்டக்களப்பு சிவபூமி திருவாசக அரண்மனை நாளை 24.03.2023 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. 

GalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026