யாழ்ப்பாணத்தை வந்தடைத்த தொல். திருமாவளவன்!
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இன்று (13) நாட்டை வந்தடைந்த அவரை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் (P. Ayngaranesan) வரவேற்றார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்
குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் நாளை (14) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் தொல்.திருமாவளவன் இன்றையதினம் முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகினறமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |