மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
மன்னார் (Mannar) மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் இரணைஇலுப்பை குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் இதன்போது கெளரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் எற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னைநாள் போராளிகள், மாவீரர் பெற்றோர்கள் மற்றும் மக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன் கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[IVOLMOF]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |