ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் (Deshabandu Tennakoon) கையளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, 5308 காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உப நிலைய பொறுப்பதிகாரிகளில் 1106 பேர் தாம் நிரந்தரமாக வசிக்கும் காவல்துறை பிரிவிலேயே பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் நிரந்தரமாக வசிக்கும் பகுதியில் 44 தலைமைச் செயலக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை பொறுப்பதிகாரிகள பணிபுரிந்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலேயே அதிகம்
மன்னார் காவல் பிரிவுக்குட்பட்டபொறுப்பதிகாரி அல்லது உப நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகிப்பவர்கள் தாங்கள் நிரந்தரமாக வசிக்கும் அதே பகுதியில் பணிபுரிபவர்கள் அதிகம்.
மேலும், மன்னார் மற்றும் மாத்தறை காவல் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நிரந்தரமாக தங்கியிருந்து பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் நிரந்தரமாக வசிக்கும் பகுதிகளிலும், அண்மித்த காவல் பிரிவில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிபுரியும் பிரிவுகளிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அநுராதபுரம் பிரிவு ஒரு சிறந்த உதாரணம் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதிக குற்றச்செயல்கள் பதிவாகிய
கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் அதிக குற்றச்செயல்கள் பதிவாகிய காவல்துறை பிரிவாக அனுராதபுரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், அதே காவல்துறையில் செயற்படும் பொறுப்பதிகாரிகள் பக்கச்சார்புடன் செயற்படுவது, செயல்திறனைக் குறைத்து மதிப்பிடுவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதில் தயக்கம், நேசத்துக்கு உந்துதலாக இருப்பது போன்ற பல பிரச்னைகள் எழுந்துள்ளன.
காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |