ஜே.வி.பி ஆட்சிக்கு வந்ததும் அனைவரையும் தாக்குவோம் : ஓய்வு பெற்ற சிறிலங்கா இராணுவ வீரர் மிரட்டல்
ஜனதா விமுக்தி பெரமுனவின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவர்,கட்சியின் சட்டையை அணிந்துகொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய அனைத்து கட்சியினரையும் தாக்குவோம் என மிரட்டல் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த(Premanath C. Dolawatte) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்கள் என்ற அமைப்பு நடத்திய அரசியல் கூட்டத்தின் முடிவில் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நாங்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள்
தேசிய மக்கள் சக்தியின் கட்சி சின்னம் கொண்ட டீ-சேர்ட் அணிந்து “நாங்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள அனைவரையும் தாக்குவோம்,'' என, சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிடுவது, வன்முறையை தூண்டுவதாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாடு இரத்தக் களரியாக மாறும் அபாயம்
தேர்தலின் பின்னரான வன்முறைகள் மூலம் நாடு இரத்தக் களரியாக மாறும் அபாயம் உள்ளதால், இது குறித்து அவசர விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |