ஜனாதிபதி தேர்தல் : இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் (Election Commission) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளின் போது துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்காக 5 பேர் மாத்திரமே வீடுகளுக்குச் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் (Achchuthan Sivasubramaniam) தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் வழிகாட்டல்களில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகளுக்கும் காவல்துறையினருக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |