தமிழர் தரப்புக்கு பிரான்சில் இருந்து வந்த மிரட்டல்
யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்ற போது, அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளகூடாது என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு பிரான்சிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Wigneswaran) இதனை தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமானுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். அந்த கலந்துரையாடலில் எமது கட்சி சார்பில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்சிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்த நபர் ஒருவர், கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும் என மிரட்டியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,