அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள மூன்று நியமனங்கள்
இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு
இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சேத்திய குணசேகர மற்றும் கே.பெர்னாட் ராஜபக்ச ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறை
இதேவேளை கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 10 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் 02 மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
இந்த நியமனங்களும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |