யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று(22.04.2026) இடம்பெற்றுள்ளது.
இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மற்றும் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களால் முறைப்பாடு
வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக சிறு கடற்றொழிலாளர்களால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காங்கேசன்துறையில் இருந்து மிக இரகசியமாக வரவழைக்கப்பட்ட கடற்படையின் அதிவிரைவு ரோந்து படகுகள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியை திடீர் சுற்றிவளைப்பு செய்துள்ளனர்.
இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |