அம்பாறையில் பெண் உட்பட மூவர் கைது
அம்பாறை மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியேட்டர் வீதிக்கு அருகில் வைத்து பெண் உட்பட மூவர் 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பகுதியை சேர்ந்த சுமார் 51,27,18 வயதுள்ள சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் சான்று பொருட்கள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



