மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் உட்பட மூவர் கைது

Mannar Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Jan 19, 2025 03:30 PM GMT
Report

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

மேலதிக விசாரணை

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்த நிலையில், விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் உட்பட மூவர் கைது | Three Arrested Over Fatal Shooting In Mannar

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.   

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல இலட்சம் ரூபா மோசடி!

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல இலட்சம் ரூபா மோசடி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016