பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Jun 06, 2026 10:49 AM GMT
Report

கொழும்பில் போலி ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளைத் தயாரித்து வந்த இரகசிய மத்திய நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

பொரளை பகுதியில் இயங்கிய மத்திய நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை

கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை

சந்தேகநபர்கள் கைது

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இதில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான போலி ஆவணங்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொரளை, என். எம். பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்டகாலமாக இந்த போலி ஆவணத் தயாரிப்பு மத்திய நிலையம் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது | Three Arrested With 600 Fake Government Stamps

இதன்போது, 600 போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள், காணிப் பதிவு அலுவலகத்தின் முத்திரையிடப்பட்ட பிரதிகள் அடங்கிய இரண்டு அசல் கோப்புகள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் தட்டச்சு இயந்திரம் ஒன்று, ஒரு சிற்றூந்து (Car) மற்றும் ஒரு உந்துருளி (Motorbike), 1.5 மில்லியன் ரூபா பணம் ஆகியன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட இலச்சினைகளுள் முக்கிய அரச திணைக்களங்கள், சமாதான நீதவான்கள், சான்றுறுதியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளின் போலி இலச்சினைகளும் அடங்குகின்றன.

வாயில்லா ஜீவன்கள் மீது அரங்கேறிய கொடூரம்! அயலவர்கள் முறைப்பாடு - ஒருவர் கைது

வாயில்லா ஜீவன்கள் மீது அரங்கேறிய கொடூரம்! அயலவர்கள் முறைப்பாடு - ஒருவர் கைது

காவல்துறையினர் முற்றுகை

குறித்த இடத்தைக் காவல்துறையினர் முற்றுகையிட்ட போது அங்கிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவலின் அடிப்படையில், நுகேகொட, தெல்கந்த பகுதியில் வைத்து மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது | Three Arrested With 600 Fake Government Stamps

கைது செய்யப்பட்டவர்கள் 54, 55 மற்றும் 59 வயதுடைய பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 3 ராசியினர்! யாருக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் காத்திருக்கிறது

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 3 ராசியினர்! யாருக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் காத்திருக்கிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026