முல்லைத்தீவில் புத்தர் சிலையுடன் மூவர் கைது!
Investigation
Police
Mullaitivu
By Vasanth
முல்லைத்தீவு நகர்பகுதியில் பெறுமதியான புத்தர் சிலையினை வியாபாரத்திற்காக விற்கமுற்பட்ட ஹட்டனைச் சேர்ந்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தென்பகுதியினைச் சேர்ந்த குறித்த நபர்கள் பேஸ்புக் ஊடாக 06 கிலோ வெங்கல புத்தர் சிலையினை பவுண் சிலை என விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்து முல்லைத்தீவிற்கு கொண்டு வந்து விற்பனைக்கு முயன்றவேளை சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
ஹட்டனைச் சேர்ந்த வாகனமும் அதன் சாரதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி