மூதூரில் அதிரடி சுற்றிவளைப்பில் மூவர் கைது!
மூதூரில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்த சுற்றிவளைப்பானது மூதூர் போதை ஒழிப்புப் பிரிவினரால் நேற்று (22.11.2025) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
அதிகாரிகள் மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, மூதூர் கங்கை பாலத்தில் வைத்து 28 வயதுடைய சந்தேக நபரொருவரை சோதனைக்குட்படுத்திய போது 5100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா -பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை மூதூர் -பச்சநூர் சந்தியில் வைத்து 900, 700 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சியுடன் உப்பூறல், சஹாயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23, 45 வயதுகளையுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |