கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
corona
sri lanka
people
By Shalini
கொரோனா தொற்றுக்குள்ளான 27 வயதுடைய பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையிலேயே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கர்ப்பிணிப்பெண்கள் இயலுமான வரை விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.