ரொறன்டோவில் அடுத்தடுத்து மரணித்த மூன்று மருத்துவர்கள் -மக்களிடையே கடும் அதிர்ச்சி
அடுத்தடுத்து மரணித்த மூன்று மருத்துவர்கள்
கனடாவின் றொரன்டோவில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொக்டர் ஜாகுப் சௌகீ (Dr. Jakub Sawicki,) , டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr. Stephen McKenzie) மற்றும் டொக்டர் லோர்ன் சீகால் (Dr. Lorne Segall) ஆகியோரே மரணித்தவர்களாவர்.
நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் இந்த மருத்துவர்கள் அளப்பரிய சேவையை ஆற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கு கொவிட் தடுப்பூசி காரணமா
இந்த மூன்று மருத்துவர்களும் கொவிட் தடுப்பூசி காரணமாக மரணித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் மருத்துவர்களின் மரணத்திற்கு கொவிட் தடுப்பூசிகள் காரணம் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி, டொக்டர் லோரன் சீகல் (Dr. Lorne Segall)தனது 49வது வயதில் நுரையீரல் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். கடந்த 18ம் திகதி டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr. Stephen McKenzie) நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 21ம் திகதி டொக்டர் ஜாகொப் சௌகீ (Dr. Jakub Sawicki,) உயிரிழந்தார்.
இந்த மூன்று மருத்துவர்களின் சேவையை பாராட்டியும் அவர்களுக்கு இரங்கல் வெளியிட்டும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பாரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
