பாலஸ்தீன சகோதரர்கள் துப்பாக்கிசூடு : மூன்று இஸ்ரேலியர் பலி பலர் படுகாயம் (காணொளி)
ஆயுததாரிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று வியாழன் காலைவேளை பாலஸ்தீன சகோதரர்கள் இருவர் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் பகுதியில் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை நடத்திய இருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை அறிவித்தது.
சகோதரர்கள் இருவர்
பாலஸ்தீனிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான WAFA இன் தகவலின்படி,தாக்குதலை மேற்கொண்ட இரண்டு பாலஸ்தீனியர்கள் முராத் நிம்ர், 38, மற்றும் இப்ராஹிம் நிம்ர், 30, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறமான சுர் பஹெர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
Video footage of the shooting operation at the entrance to the Ramot settlement in Jerusalem, resulting in three settlers killed and six others injured, including four in critical condition.
— The Palestine Chronicle (@PalestineChron) November 30, 2023
FOLLOW OUR LIVE BLOG:https://t.co/VzKXp0Mz4s pic.twitter.com/UaZzpy1OWW
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் பல நுழைவாயில்களை இஸ்ரேலிய காவல்துறையினர் மூடினர், அதில் நகரின் வடக்கே உள்ள பெரிய கலாண்டியா சோதனைச் சாவடியும் அடங்கும்.இந்த சோதனை சாவடி ஊடாக மக்கள் கடந்து செல்வதைத் தடுத்தனர் என்று WAFA மேலும் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து
மேலும், இஸ்ரேலிய காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் சோதனை நடத்தியதுடன் தாக்குதலை மேற்கொண்ட உடன்பிறந்தவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்களை விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.
Israeli occupation forces stormed the family homes of Murad and Ibrahim Nimr, who carried out a shooting operation at the entrance to the Ramot settlement in occupied #Jerusalem.
— The Palestine Chronicle (@PalestineChron) November 30, 2023
FOLLOW OUR LIVE BLOG:https://t.co/VzKXp0Mz4s pic.twitter.com/QefJdv4E6d
இதேவேளை இந்த தாக்குதலை தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே நடத்தியதாக ஹமாஸ் உரிமை கோரியுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்