பாம்பு கடித்ததில் உயிரிழந்த கர்ப்பிணித்தாய்! திருகோணமலையில் நடந்த சம்பவம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Laksi
திருகோணமலை- மொரவெவ பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாதகர்ப்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று மாத கர்ப்பிணித்தாய்
குறித்த கர்ப்பிணித்தாய் நேற்று(20) மாலை மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்