கடலில் குளிக்கச் சென்ற மூவரை அடித்துச் சென்றது அலை
Matara
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Sumithiran
டிக்வெல்ல, நில்வெல்லவில் உள்ள ப்ளூ பீச் தீவுக்கு அருகில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இன்று (06) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டவேளை ஒருவர் உயிரிழந்த நிலையிலும் மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
இறந்தவரின் உடல் பதிகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, மற்ற இருவரும் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர் மதவியங்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், 51 மற்றும் 38 வயதுடைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்