அமெரிக்க பேச்சுவார்த்தை! பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கும் ஈரானிய விமானங்கள்
ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தங்கியுள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில், கடந்த ஒரு மணி நேரத்தில் ஈரானின் தெஹ்ரானில் இருந்து வந்த மூன்று விமானங்கள் தரையிறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானங்கள் ஈரானின் புயா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. இந்த விமான நிறுவனம் ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC), குறிப்பாக அதன் குட்ஸ் படை மற்றும் விண்வெளிப் படைகளுடன் தொடர்புடைய ஒரு சரக்கு விமான நிறுவனமாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
70 பேர் கொண்ட ஈரானிய தூதுக்குழு
ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் 70 பேர் கொண்ட ஈரானிய தூதுக்குழுவினர் தங்கியுள்ள நிலையில், தற்போது திடீரென இந்த விமானங்கள் ஏன் வந்துள்ளன அல்லது யாரை ஏற்றி வந்துள்ளன என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், பேச்சுவார்த்தைகள் மிகவும் விரிவான நிலையை எட்டியுள்ளதால், ஈரானில் இருந்து சில கூடுதல் நிபுணர்கள் பாகிஸ்தான் வரக்கூடும் என்று ஈரானிய வட்டாரங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |