யாழ் . பல்கலை மருத்துவபீடத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக(university of jaffna) மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ பீடத்தின் ஒட்டுண்ணியல் துறை, சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம்
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று - ஜூலை 26 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஒட்டுண்ணியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. முருகானந்தன், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். குமரன் மற்றும் சத்திரசிகிச்சையியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கோபிசங்கர் ஆகி யோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு
அவற்றின் அடிப்படையில், கலாநிதி ஏ. முருகானந்தன் ஒட்டுண்ணியலில் பேராசிரியராகவும்,
கலாநிதி எஸ். குமரன் குடும்ப மருத்துவத்தில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். கோபிசங்கர் சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
