மூன்று தடவைகள் தனிமைப்படுத்தப்பட்ட மகிந்த
isolated
mahinda rajapaksha
three times
By Sumithiran
சூழ இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மூன்று தடவைகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதேபோன்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும 4 சந்தர்ப்பத்தில்தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அமைச்சர் விமல் வீரவன்ச 03 தடவை தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவும் அவரது மனைவியும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவரது மகள் உட்பட 05 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.