யாழில் பல வாகனங்கள் மோதி பாரிய விபத்து : ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (25) கோப்பாய் சந்தி பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து, ஹயஸ் ரக வாகனம், கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்தது.

விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்