முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை : இன்றுகாலை கொடூரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (18) காலை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (18) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி எனவும் அவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |