வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருள் கோரி முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் போராட்டம்
வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருள்
வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி தொழில்சார் முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தினரால் பிலியந்தலை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வாரத்திற்கு வழங்கப்படும் 5 லீற்றர் எரிபொருள் போதாது எனவும் அது ஒரு நாளுக்கு மட்டுமே போதுமானது எனவும் அவர்கள் அரசாங்கத்திடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தொழில்சார் முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர,
ரணில் ராஜபக்ச அரசாங்கம்
இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கம் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களையும் தோல்வியடையச் செய்துள்ளது, வாரத்திற்கு ஐந்து லீற்றர் எரிபொருளை கி யு ஆர் முறை மூலம் வழங்குவது போதாது.
எமது பிள்ளைகள், குடும்பங்கள் அனைவரும் இதிலிருந்து உண்பதும் பருகுவதும் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் பங்காற்றுகின்றனர்.
முதல் கிலோமீட்டரை 100 ரூபாயில் ஓடவிடுவோம்.இரண்டாவது கிலோமீட்டரை 90 ரூபாய்க்கு ஓடவிடுவோம்.பிரச்சனை இல்லை வாரத்திற்கு முப்பது லீட்டர் எரிபொருள் தேவை என்று கேட்கிறோம்.
பிலியந்தலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை இன்று முதல் நாடு முழுவதும் முன்னெடுத்துச் செல்வோம் எனத் தெரிவித்தார்.