முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய இணைப்பு
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்காத பச்சத்தில் சாரதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை 076 045 0860 என்ற இலக்கத்துக்கு அழைத்துத் தெரிவிக்குமாறு, மேல் மாகாண வீதி பொது போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுடன் புதிய கட்டணத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் (Western Province) இன்று (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இரண்டாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் (Colombo) நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
புதிய கட்டணம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீற்றருக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும்.
இரவு 10 மணி முதல் காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% அதிகமாக சேர்க்கப்படும்.
அந்த கட்டணத்தை மீற்றரில் கணக்கிடுவதில் சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால், சரியான தகவல்களுடன் காவல்துறைக்கும், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் (Consumer Affairs Authority) பயணிகள் தகவல் தெரிவிக்கலாம்.
எனவே இந்த தொழிலில் ஈடுபடுவோர் நேர்மையுடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு முச்சக்கரவண்டி தேவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது டைனோசர் போல் அழிந்து போவதைத் தடுக்க முடியாது" என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |