இரத்தக்கறை படிந்த வாள்களுடன் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி!
Sri Lanka Police
Kandy
By Laksi
a year ago
முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியை சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைத்திருந்த ஆறு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்கள்
மேலும் முச்சக்கரவண்டியிலிருந்து மூன்று வாள்கள், ஒரு இரும்புக் கம்பி, ஒரு கத்தி மற்றும் இரண்டு தோட்டாக்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய போதே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி