கொள்ளையடிக்கும் முச்சக்கரவண்டிகள் -மாற்றுவழியை நாட முடிவு
கிராமப்புறங்களில் உள்ள மக்களை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கரவண்டி சாரதிகள் அவர்களிடமிருந்து பணத்தை பெருமளவில் அறவிடுவதாகவும் எனவே ஒற்றை கதவு பேருந்துகளை கிராப்புற பயணத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) கூறியுள்ளது.
"ஒற்றைக் கதவு கொண்ட பேருந்துகளை அதிக அளவில் ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. முச்சக்கர வண்டிகள், குறுகிய தூர பயணங்களுக்கு பயணிகளிடம் இருந்து அதிக தொகையை வசூலிக்கின்றன.
ஒற்றை கதவு பேருந்துகளை செலுத்த

"எனவே, கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் ஒற்றை கதவு பேருந்துகளை செலுத்த எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அத்தகைய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சக செயலாளருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
முறைப்பாடுகள்

“கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதிக கட்டணம் செலுத்தாமல் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வருகின்றன.
எனவே, குறைந்த பட்சம் 10 ஆசனங்களுக்கு ஏற்ற வகையில் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு LPBOA போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.