கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது
சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழியாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற மூன்று இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், புத்தளம் - கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும், கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவருமான வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தபெறுமதி 80 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான பெறுமதி போதைப்பொருள்
அவர்கள் நேற்று (09) இரவு 10.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து Thai AirAsia விமான சேவையின் FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |