சோள இறக்குமதி மீதான கட்டுப்பாடு : நிறுத்தப்பட்டது திரிபோஷா உற்பத்தி
சோள இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகம் இந்த முடிவுக்கு திருத்தங்களை சமர்ப்பித்துள்ளார்.
சோள இறக்குமதி தடை
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பத்திரம் 7 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறும் வரை சோள இறக்குமதி தடைசெய்யப்பட்டிருக்கும் என்று இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க விளக்கினார்.
இதன் விளைவாக, 21 ஆம் திகதி முதல் திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 7 ஆம் திகதிக்குப் பிறகு சோள இறக்குமதி மீண்டும் தொடங்கியவுடன் உற்பத்தி வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என்று தலைவர் மேலும் உறுதியளித்தார்.
இருப்பு நாடு முழுவதும் விநியோகம்
இதற்கிடையில், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட திரிபோஷாவின் இருப்பு தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக நிறுவனம் உறுதிப்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
