பிடியாணை பிறப்பிக்கப்பட்ட துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரண்!
CID - Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Kanooshiya
கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்ததாக துசித ஹல்லொலுவ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று (13.11.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் சரண்
இதன்போது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா துசித ஹல்லொலுவவை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், துசித ஹல்லொலுவ இன்று (14.11.2025) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி