உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
death
tiger
dayagama
By Vanan
டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று மதியம், சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தையே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா? அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக டயகம பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் உடலில் காயங்களும் காணப்படுதுடன், சிறுத்தையின் சடலத்தை நுவரெலியா வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி