டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு!
United States of America
TikTok
World
By Shalini Balachandran
டிக்டொக்(TikTok) செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் டிக்டொக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால் அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்டொக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய் நிறுவனம்
குறித்த வழக்கில் இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி இரகசியமாகத் தகவல்களை எடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டொக், அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்