ஜே.வி.பி.யின் சொத்து விபரங்கள் வெளிச்சத்திற்கு.! ரில்வின் சில்வா வெளிப்படை
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தனது மற்றும் கட்சியின் சொத்துக்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வியில் அவர் அவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
தனிப்பட்ட சொத்து
அதன்போது, கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவின் சார்பாக கட்சியின் அனைத்து சொத்துக்களுக்கும் அவர் பொறுப்பு என்றும் அவருக்கு எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை என கூறியுள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைமையகமான பெலவத்தை அலுவலகம் அவரது தனிப்பட்ட சொத்து அல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கட்சிக்குச் சொந்தமான வாகனங்கள், நிலங்கள் மற்றும் பிற சொத்துக்கள் கூட பொதுச் செயலாளர் பதவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், நாளை வேறு யாராவது பொதுச் செயலாளராக வந்தால், அந்தப் பொறுப்பு அவருக்கு மாற்றப்படும் என்றும் ரில்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் செலவுகள்
நேர்காணலின் போது இந்த சொத்துக்களை பெறப்பட்டது என்று கேட்கப்பட்ட போது,
“அவற்றில் சில பரிசுகள். அவற்றில் சில பணம் வசூலிப்பு மூலம் கிடைத்தவை உண்மையைச் சொல்லப் போனால், அவற்றில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை பயன்படுத்தி வாங்கப்பட்டவை,” என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தனது கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் எந்த சுயநல நோக்கமும் இல்லாமல் கட்சியின் செயல்பாடுகளுக்கு உதவுவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில், கட்சியின் பயணங்களுக்கு எரிபொருள் அல்லது உணவு வாங்க உறுப்பினர்கள் பணம் அல்லது பொருட்களை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வசந்த சமரசிங்க போன்ற தலைவர்களுக்கு பணமும் சொத்தும் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், அந்தப் பணம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை, மாறாக கட்சியின் பயணங்களுக்காக வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
