வீட்டிற்கே வந்து செல்லும் சிறுத்தை! அச்சத்தில் பிரதேச மக்கள்
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களையும், கோழிகளையும் இரையாக இழுத்துச் செல்வதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை என்றும், சிறுத்தை ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் நடமாட்டம்
இதன்காரணமாக குறித்த சிறுத்தையை பிடித்து, வேறு பொருத்தமான சூழலுக்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள ஒரு நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதோடு, மேற்படி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
