புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கடத்தல் : காவல்துறையினர் முறியடிப்பு!
புதுக்குடியிருப்பிலிருந்து (Puthukkudiyiruppu) - யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வைத்து நேற்றையதினம் (27) இந்த மரக்கடத்தல் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து ஏ-35 பிரதான வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் சோதனை
அதற்கு அமைவாக தருமபுரம் காவல்துறையினர் நேற்றையதினம் வீதி சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது பெறுமதிமிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் சிறிய ரக பாரவூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
