கால அவகாசம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
sri lanka
people
vasudeva nanayakara
By Shalini
நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகை காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.