TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு

Sri Lankan Peoples Inland Revenue Department TIN Number
By Sathangani Nov 03, 2026 11:10 AM GMT
Report

வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள (IRD) அலுவலகங்களுக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரி செலுத்துவோர் அடையாள எண் சான்றிதழ்களைப் பெற வேண்டிய கட்டாயம் பொதுமக்களிடையே தேவையற்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் பதற்றமடைய வேண்டாம்.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

புதிய நடைமுறை 

ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகன வருமான உரிமம் பெறுதல் அல்லது வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு, இனி மக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு நேரில் சென்று TIN சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை. இதற்கான புதிய நடைமுறை குறித்த விசேட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு | Tin Public No Longer Required To Visit Ird Offices

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், இதுவரை TIN சான்றிதழுக்கு பதிவு செய்யாதவர்கள், தாங்கள் சேவையைப் பெற விரும்பும் நிறுவனத்திடம் தமது தேசிய அடையாள அட்டையின் (NIC) நகல், பயன்பாட்டிலுள்ள கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்கினால் போதுமானது.

தொடர்புடைய நிறுவனம், விண்ணப்பதாரருக்குத் தேவையான சேவையை வழங்குவதுடன், TIN தொடர்பான நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து செயற்படும்.

போதைப்பொருள் கடத்தல்கார பெண்களுடன் தொடர்பு : அக்குரஸ்ஸ குற்றப்பிரிவு OIC அதிரடியாக பணிநீக்கம்

போதைப்பொருள் கடத்தல்கார பெண்களுடன் தொடர்பு : அக்குரஸ்ஸ குற்றப்பிரிவு OIC அதிரடியாக பணிநீக்கம்

 மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

விண்ணப்பதாரரின் விபரங்களை அந்த நிறுவனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பும், அதன் பின்னர் திணைக்களம் அந்த விண்ணப்பதாரருக்குரிய TIN அல்லது வருமான வரி எண்ணை, அவர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்.

TIN இலக்கம் பெற வரிசையில் நிற்க வேண்டாம் : மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவிப்பு | Tin Public No Longer Required To Visit Ird Offices

மேலும், தனிநபர்கள் தமது அடையாள அட்டை எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி முறைமை (Online System) மூலமாகவும் TIN மற்றும் வருமான வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய நடைமுறை ஏற்கனவே TIN வைத்திருப்பவர்களுக்கும், இன்னும் பெறாதவர்களுக்கும் பொருந்தும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு TIN கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறித்தும், இதனால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிரமங்கள் குறித்தும் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: வெளியான புதிய தகவல்

கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: வெளியான புதிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி