திருகோணமலையில் பேருந்து - டிப்பர் மோதி விபத்து
திருகோணமலையில் (Trincomalee) பேருந்து ஒன்றின் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா காவல் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்து தரிப்பிடம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆயிலியடியிலிருந்து கிண்ணியா நோக்கி புறப்பட்ட பேருந்து, சூரங்கல் அல் அமீன் பாடசாலைக்கு முன்னால் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் வேளையில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது, பின்னாலிருந்து வந்த டிப்பர் வாகனம் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகள்
இவ்விபத்தில் பயணிகள் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
