முன்னாள் பொதுபாதுகாப்பு அமைச்சருக்கு துபாயில் இருந்து வந்த கொலை மிரட்டல்
துபாயில் (dubai)உள்ள பாதாள உலகத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி அழைப்பு மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(tiran ales), பதில் காவல்துறை மா அதிபரிடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பதில் காவல்துறை மா அதிபர் ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.
பல தொலைபேசி அழைப்பு
டிரான் அலஸ் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, பாதாள உலகத் தலைவர் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
டிரான் அலஸுக்கு முன்னரும் ஒரு பாதாள உலகத் தலைவர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,டிரான் அலஸின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
