வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் - நாம் தமிழர் கட்சியின் சீமான்
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களிடம் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது.
நம்பிக்கை இல்லையா
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நீலாங்கரையில் உள்ள தனது வாக்ககத்தில் வாக்கு செலுத்தினார். pic.twitter.com/8i0EwaZHZw
— MARIA ANTONY SELVARAJ (@MAANSE28) April 23, 2026
நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்லி வருகிறது. குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சேர்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல.
வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம் தான். கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |