கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் இதனை உறுதி செய்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொண்டு இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தால் இன்னும் பலம்பொருந்தியதாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளாகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் கட்சி என எதிரணியிலுள்ள அனைவரும் இந்த வாக்கெடுப்பில் ஆதரவளித்து வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.