தமிழ்கட்சிகளின் பின்னடைவிற்கான காரணத்தை போட்டுடைத்த புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்
இறுதி 15 ஆண்டுகளாக வயதில் மூத்த தலைவர்கள் தமிழ் தேசியத்தையும் கட்சியையும் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கட்சியினுடைய செயற்பாடுகள் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாகவும் ஐ.பி.சி குழுமத்தின் தலைவரும் புலம்பெயர் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 15 ஆண்டுகளாக தமிழரசு கட்சி என்ன செய்தது என்று அந்த கட்சிக்கே தெரியாது.
தமிழரசு கட்சி பலமிழந்துள்ளது அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. மேலும், தமிழரசு கட்சியை மீளுருவாக்கம் செய்ய தலைமைகள் நினைக்கவில்லை. கட்சியின் தோல்விக்கு காரணம் யார் என அனைவருக்கும் தெரியும்.
இதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் பார்வையிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |