கட்டுக்கோப்பற்ற கட்சியா தமிழரசுக் கட்சி..! 12 மணித்தியாலத்தில் எடுக்கப்பட்ட முடிவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனை பதவி விலகக் கோருவது முறையல்ல என தமிழரசுக் கட்சியின் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தனின் நிலை அறிந்தே திருகோணமலை மக்கள் வாக்களித்தனர், எனவே சம்பந்தன் ஐயா இவ்விடத்தில் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.
சுமந்திரன் ஒருவருடத்திற்கு முன்பும் சம்பந்தனை பதவி விலக கோரியது உண்மை.
ஆனால், சுமந்திரனின் கருத்தால் சர்வதேச ரீதியாக சம்பந்தனுக்கு உள்ள நிலை மாறப் போவதில்லை” என்றார்.
கட்டுக்கோப்பற்ற கட்சியா தமிழரசுக் கட்சி? முடிவெடுப்பதில் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முரண்நிலை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சம்பந்தனுக்கான தெரிவு, சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து போன்ற பல சந்தேகங்களுக்கு அவர் வழங்கும் பதில் வருமாறு,
