கஜேந்திரகுமார் கைது - மகிழ்ச்சியில் தென்னிலங்கை இனவாதிகள்..!

Parliament of Sri Lanka Gajendrakumar Ponnambalam Uthaya Gammanpila
By Mohankumar Jun 07, 2023 12:42 PM GMT
Report

பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்தமை மகிழ்ச்சி என தென்னிலங்கையில் இனவாதத்தை கக்கி வருபவரும்,  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நல்ல செய்தி

கஜேந்திரகுமார் கைது - மகிழ்ச்சியில் தென்னிலங்கை இனவாதிகள்..! | Tnpf Mp Gajenthiran Arrest Issue Court Update

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“காவல்துறையினரது செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ததாக நல்ல செய்தி கிடைத்துள்ளது.

இதற்காக எமது காவல்துறைக்கு மரியாதை செலுத்துகின்றோம்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், தாம் நீதித்துறைக்கு மேல் உள்ளதாக அது வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது அப்படி இல்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்மூலம் நாம் நினைவுபடுத்துகிறோம்.

முக்கியமாக கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகிய பின் காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் இடையூறு விளைவித்தது இது முதல் தடவை அல்ல.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வுகளைச் செய்யும் இடங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களை பல தடவை நாம் கண்டுள்ளோம்.

தாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இடையூறு விளைவிக்க அதிகாரம் இருக்கிறது என அவர் நினைக்கிறார்.

அது அப்படி இல்லை என ஞாபகப்படுத்த செய்யப்பட்ட இந்த கைது மூலம் காவல்துறையினருக்கு முதுகெலும்பு இருப்பதைக் கண்டு சந்தோஷமடைகிறோம்.

காவல்துறை அதிகாரம்

கஜேந்திரகுமார் கைது - மகிழ்ச்சியில் தென்னிலங்கை இனவாதிகள்..! | Tnpf Mp Gajenthiran Arrest Issue Court Update

மேலும் காவல்துறை அதிகாரம் தொடர்பாக குறிப்பிடுகையில், கஜேந்திரகுமார் காவல்துறை அதிகாரம் மாகாண சபைக்கு கிடைக்க வேண்டும் என முதன்மையாக கருத்து தெரிவித்தவராவார்.

அவ்வாறு கிடைத்து இருந்தால், உதாரணமாக இச் சம்பவம் நிகழும் போது விக்னேஸ்வன் அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் கஜேந்திரகுமார் முதலமைச்சரை தொடர்புகொண்டு அவர் மூலம் காவல்துறை அதிகாரிகளை கீழ்படிந்து செல்லுமாறு பணித்து இருப்பார்." என உதய கம்மன்பில கூறியுள்ளார்.  

இதேவேளை, நாடாளுமன்றத்திலும் பல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கஜேந்திரகுமாரின் கைதை நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026