தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வு: ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து

Tamil National People's Front Dr. S. Jaishankar Selvarajah Kajendren
By Aadhithya Jun 21, 2024 07:23 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) தமிழருடைய தேசத்தையும், அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள இந்தியா (India) ஒத்துழைக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People's Front) வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன்  நேற்றையதினம் (20) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் (S. Kajendran) சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பிரித்தானிய (Britain) காலணித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டதன் பின்னரான 75 வருட காலத்தில், சிறிலங்கா அரசானது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

நாட்டின் எதிர்காலம்

கடந்த 75 வருடங்களாக இலங்கை கடைப்பிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய இந்த வங்குரோத்து நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வு: ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து | Tnpf Seeks India S Help For Tamil Rights

எனவே, இந்நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், இந்த நாட்டின் கொள்கைகளிலும் ஒரு உண்மையான தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் 'ஒற்றையாட்சி' அரசியல் அமைப்பாகும். குறிப்பாக 36 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது.

அதேவேளையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 13 ஆவது திருத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறையில் உள்ளபோதும்கூட தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர்

யாழ். விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர்

ஊழியர் சேமலாப நிதிக்காக டிஜிட்டல் தரவுத் தளம் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஊழியர் சேமலாப நிதிக்காக டிஜிட்டல் தரவுத் தளம் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
GalleryGalleryGallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026