போலித் தேசியம் பேசி மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும்!
போலி தேசியம் பேசிக்கொண்டு சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது எனக் கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்கா பயணம் செல்வதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் அறிக்கை விட்டு அரசியல் செய்யும் அந்த தொழிலை ஊடகங்களில் மாத்திரம் தான் பார்க்க முடிகின்றது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாடுகள் கண் கூட பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நமது மாவட்ட மக்களுக்கு பல பிரச்சனை இருக்கின்றது. வீதி பிரச்சினை குடிநீர் பிரச்சனை இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் ஆகவே மக்கள் ஏமாற்று அரசியலுக்குள் மூழ்காமல் எமது தலைவரின் கோட்பாட்டுக்கு அமைய எம்முடன் கைகோர்க்க வேண்டும்.
நாளாந்தம் மக்கள் நஞ்சு கலந்த உணவுகளை உட்கொண்டு பலர் இன்று சிறுநீரக நோயாளர்கள் ஆக மாற்றம் அடைந்து உள்ளார்கள் சேதன பசளைகளையும் இயற்கை உரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த போக நெற் செய்கையின் போது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அதள பாதாளத்திற்குள் சென்று விடுவோம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
பேரணிகளை நடத்தினார்கள் பத்திரிகை வாயிலாக அறிக்கைகளையும் விட்டனர். ஆனால் கடந்த வருடம் மட்டக்களப்பில் அதிக விளைச்சலை பெற்றிருந்தோம் இம்முறையும் விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கர் விததைத்துள்ளனர். இன்னும் 80 ஆயிரம் ஏக்கர் விதைப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன ஒட்டு மொத்தத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் விதைக்கப்பட்ட கொண்டிருக்கின்றது.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகளவான விளைச்சலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் போலித் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் பின்புலங்களுடன் செயற்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது .
இன்று எமது மாவட்டம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல சர்வதேசம் கூட கொரோனா தாண்டவத்தால் சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்ற வேளையில் எதிர்க் கட்சியினர் அதிலும் எதிர்ப்பு அரசியலைசெய்து கொண்டிருக்கின்றார்கள் .
எதைச்செய்தாலும் ஆர்ப்பாட்டம் எடுக்கின்றார் எதைச் செய்தாலும் விமர்சிக்கிறார்கள் இவர்களது தொழிலே அரசாங்கத்தை விமர்சிப்பதாகவே இருக்கின்றது.
தங்களது ஆசனங்களை சூடாக்கி கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு தங்களது ஆசனங்களை கைப்பற்றலாம் என்றும் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு தங்களது கட்சியின் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியலையே இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.