பாசிக்குடாவில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து
Batticaloa
By Sumithiran
மட்டக்களப்பு பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

