இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி: காரணத்தை போட்டுடைத்த அர்ச்சுனா!
வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் முன்வைத்த பிரேரனை தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களை பாதுகாப்போம் என அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டு, நீங்களே ஒரு பாதுகாப்பு பிரேரணையை கொண்டு வந்து வடக்கு கிழக்கில் போதைப்பொருளை ஒழிக்கப்போவதாக கூறுவது மிகவும் கேவலமாக இருப்பாகவும் அரச்சுனா தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின், அந்த நாட்டிலே நீதி, நியாயம் ஒரு போதும் நிலை நாட்டப்படாது என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் பதவி உயர்வு வழங்காத கேவலமான அரசாங்கத்தில் பங்கு வகித்து கொண்டு எவ்வாறு நீங்கள் இவ்வாறான பிரேரணையை கொண்டு வருவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
